ஓமியோபதி முதுகலை மருத்துவப் பட்டப் படிப்பு: காலியாக உள்ள இருக்கைகளுக்காக உடனடி கலந்தாய்வு

சென்னை அரும்பாக்கத்திலுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகத்தில் அமைந்துள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் ஏப்ரல் 20-ல் நடைபெறும்

Update: 2022-04-12 06:23 GMT

2021-22-ஆம் கல்வியாண்டில், M.D. (ஓமியோபதி) முதுகலை மருத்துவப் பட்டப் படிப்பு, சுயநிதி இந்திய மருத்துவமுறை (சிறுபான்மையினர் / சிறுபான்மையினர் அற்ற) மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இருக்கைகளுக்கு நடைபெற்ற முதற்கட்ட கலந்தாய்வின் முடிவில் நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இருக்கைகளுக்காக உடனடி கலந்தாய்வு நடைபெற உள்ளது.

சென்னை அரும்பாக்கத்திலுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகத்தில் அமைந்துள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் 20.04.2022 அன்று காலை 10.00 மணியளவில் இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்திய மருத்துவமுறை (சிறுபான்மையினர் / சிறுபான்மையினர் அற்ற) மருத்துவக் கல்லூரிகளில் உள்ள M.D. (ஓமியோபதி ) முதுகலை மருத்துவப் பட்டப் படிப்பு பயில்வதற்கு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இருக்கைகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் B.N.Y.S. இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றும் மற்றும் 2021-ம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (AAPGET 2021 ஓமியோபதி ) கலந்து கொண்டு தகுதிக்கு தேவையான சதமான மதிப்பெண்களை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் : அனைத்து வகுப்பினரும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.5000-(ரூபாய் ஐயாயிரம் மட்டும் ) 20.04.2022 அன்று கலந்தாய்வின் போது நேரில் பணமாக செலுத்த வேண்டும்.

இந்த உடனடி கலந்தாய்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ள அனைவரும், விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 11.04.2022 முதல் 20.04.2022 பிற்பகல் 11.00 மணிவரை அலுவலக வலைதளமான www.tnhealth.tn.gov.in - னிலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து இணைப்புகளுடன் (தங்களது சுயசான்றொப்பமிட்ட சாதிச்சான்றிதழ் நகல், இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்பு சான்றிதழின் நகல் போன்றவை) வருகின்ற 20.04.2022 அன்று காலை 11.00 மணிக்குள் சென்னை - 106, அரும்பாக்கத்திலுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகத்தில் அமைந்துள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் நேரடியாக மட்டும் சமர்ப்பித்தல் வேண்டும் 11.00 மணிக்குமேல் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் கண்டிப்பாக பெறப்படமாட்டாது.

பொது தரவரிசைப் பட்டயல் அன்றைய தினமே (20.04.2022) விண்ணப்பதாரர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும் சரிபார்த்தபின்னர் பிற்பகல் 1.30 மணியளவில் வெளியிடப்பட்டு, அன்றையதினமே பிற்பகல் 2.00 மணியளவில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் தரவரிசையின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். மேலும், கலந்தாய்வில் பங்குபெற விருப்பமுள்ள அனைத்து மாணவர்களும், விண்ண ப்பக் கட்டணமாக ரூ.5000.00 கலந்தாய்வுக் கட்டணமாக ரூ.1000.00 ரொக்கமாக செலுத்த வேண்டும். கல்லூரியைத் தேர்வு செய்யும் மாணவர்கள் பகுதி கல்விக் கட்டணமாக முன்பணம் ரூ.25000.00 செலுத்த வேண்டும்.இவ்வாறு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News