காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர் காயம்..!

காரியாபட்டி அருகே , அழகிய நல்லூர் கிராமத்தில் வீட்டு மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்.

Update: 2024-05-17 13:23 GMT

இடிந்து விழுந்த மேற்கூரை.

காரியாபட்டி :

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வீடு மேற்கூரை விழுந்து 6 பேர் காயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அழகிய நல்லூரியில் அனந்த பிரியா என்பவர்  குடும்பத்துடன் காரை வீட்டில் குடியிருந்து வருகிறார். அவரது வீட்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததில், அனந்த பிரியா (வயது 25). அருணா தேவி (வயது 27). லோகேஸ்வரி (வயது 17). ஆருஷ் (வயது 8) . செவின் (வயது3) .சார்ஜன் (வயது 11/2) ஆகியோருக்கு  காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை, பொது மக்கள உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் , சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, தகவல் கிடைத்தும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மல்லாங்கிணர். போலீசார் விசாரித்து வருகின்றனர் .


மழைக்கால எச்சரிக்கை 

மழைக்காலங்களில் பழைய வீடுகளில் வசிப்போர் கூரையில் சிறிய விரிசல் விட்டிருந்தாலும் அதை பூசி பழுதுபார்க்க வேண்டும். மழைக்காலங்களில் மாவட்ட நிர்வாகம் மழைக்கால முன்னெச்சரிக்கை  அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. மின்கம்பி அறுந்து விழுந்தால் அருகில் செல்லக்கூடாது. மரங்களில் கம்பிகளைக்கொண்டு எதையும் எடுக்கக்கூடாது. குறிப்பாக மின்சார வயர்களுக்கு கீழே துணிகளை காய வைக்கக்கூடாது. 

சிறுவர்கள் அல்லது சிறு வயது குழந்தைகளை நீர்நிலைகளுக்கு செல்ல நானுமதிக்கக் கூடாது. இப்படி மழைக்காலங்களில் பாதுகாப்பான் நடவடிக்கைகளை மக்களும் பின்பற்றி பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளவேண்டும். 

Tags:    

Similar News