ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தொடரப்பட்ட 38 வழக்குகளைத் திரும்பபெற தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தொடரப்பட்ட 38 வழக்குகளைத் திரும்பபெற தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு காயங்கள் குறித்தும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை தமிழக முதலமைச்சரிடம் கடந்த 14ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை அரசு கவனமாக பரிசீலித்தது ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் கடந்த 21ஆம் தேதி அன்று வெளியிட்ட அறிவிப்பின் படி மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட விளக்குகளை தவிர 38 வழக்குகளை திரும்ப பெற்றிடவும் அதில் தொடர்புடைய கீழ்க்கண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்றிட உத்தரவிட்டுள்ளார்.