நெல்லை- ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்த நபர்கள் - மாநகர காவல் துணை ஆணையர் அறிவுரை

நெல்லையில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை மாநகர காவல் துணை ஆணையர் அழைத்து அறிவுரை வழங்கினார்

Update: 2021-05-26 07:38 GMT

நெல்லையில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை மாநகர காவல் துணை ஆணையர் அழைத்து அறிவுரை வழங்கினார்

நெல்லை மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் மாநகர காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் மாநகரின் முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் மருத்துவ காரணங்களுக்காக ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் தொடர்ந்து சாலைகளில் சென்று கொண்டிருக்கின்றனர் இந்த சூழ்நிலையில் நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகில் ஊரடங்கு விதிகளை மீறி வலம் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் சுமார் 20 வரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான காவலர்கள் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவர்களை சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து என்ன காரணத்துக்காக வெளியே வந்தீர்கள் என்று ஆய்வாளர் மகேஷ்வரி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் அந்த வாகன ஓட்டிகளிடம், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு அடிக்கடி வெளியே வராதீர்கள்.

உங்கள் நல்லதுக்காகத்தான் நாங்கள் சொல்கிறோம் நாட்டுக்கு நீங்கள் முக்கியம் எனவே மீண்டும் இது போன்று தேவையில்லாமல் வெளியே வராதீர்கள் என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்

Similar News