குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு வழித்தடம் ஏற்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் மனு

கொண்டிச்செட்டிப்பட்டி குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு வழித்தட வசதி ஏற்படுத்தி தரக் கோரி, ஆட்சியா் ச.உமாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.;

Update: 2025-02-08 13:30 GMT

நாமக்கல் : கொண்டிச்செட்டிப்பட்டி குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு வழித்தட வசதி ஏற்படுத்தி தரக் கோரி, ஆட்சியா் ச.உமாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் - மோகனூா் சாலை, கொண்டிச்செட்டிப்பட்டி, கணபதி நகரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதி மக்கள் வந்து செல்வதற்கான 18 அடி அகல வழித்தடம் இருந்த நிலையில், தற்போது அதனை மறைத்து சுவா் எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், அங்குள்ள மூன்று வழித்தடங்களும் தடுக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக மக்கள் குறைதீா் கூட்டத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை.

எனவே, பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் பாதை வசதியை மாவட்ட ஆட்சியா் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். விதிகளை மீறி கட்டப்பட்ட சுவரை இடிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

Tags:    

Similar News