லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் செறுக்குடன் கைது..!

லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் செறுக்குடன் கைது.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-02-08 12:15 GMT

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (24). லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை டூவீலரில் எருமப்பட்டி சென்றார். அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் கையை காட்டி அருண்குமாரிடம் லிப்ட் கேட்டுள்ளனர்.

தாக்குதல்

அருண்குமார் டூவீலரை நிறுத்திய போது, 2 வாலிபர்களும் திடீரென அருண்குமாரை சரமாரியாக தாக்கினர். அதிர்ச்சியடைந்த அருண்குமாரின் சட்டை பாக்கெட்டில் இருந்த ₹1000த்தை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர்.

புகார்

இதுகுறித்து அருண்குமார் எருமப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர்.

குற்றவாளிகள் அடையாளம்

வழிபறியில் ஈடுபட்டது எருமப்பட்டி அடுத்த பர்கூர் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் ரகுநாத் (21), ராஜமாணிக்கம் மகன் சந்தோஷ் (23) என்பது தெரியவந்தது.

கைது நடவடிக்கை

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News