குண்டு எறிந்து சாதனை : 88 வயதிலும் சாதித்து காட்டி கோல்டு மெடலை குவித்த முதியவர்!

88 வயதான கொளந்தன், தமிழக அரசின் இளநிலை பொறியாளராக பணியாற்றி கடந்த 1995-ல் ஓய்வு பெற்றார்.;

Update: 2025-02-06 08:30 GMT

நாமக்கல் : 88 வயதான கொளந்தன், தமிழக அரசின் இளநிலை பொறியாளராக பணியாற்றி கடந்த 1995-ல் ஓய்வு பெற்றார். இவர் கல்லூரி காலம் முதல் குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்றவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தார்.

மூன்று அறுவை சிகிச்சை பிறகும் குண்டு எறிதலில் சாதனை

மூன்று அறுவை சிகிச்சை பிறகும் குண்டு எறிதலில் சாதனை படைத்து வரும் நாமக்கல்லை சேர்ந்த முதியவர் கொளந்தன்.

முதுமையும் சவால்களும்

முதுமையை பெரும்பாலானவர்கள் விரும்புவது கிடையாது. ஆனால் அது வாழ்க்கையின் ஒரு அங்கம். இயற்கையை நாம் ஏற்றுதான் ஆக வேண்டும். குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன் ஆயுளை செலவிடுகிறவர்கள் முதியோர்.

இளமையில் விளையாட்டு, முதுமையில் நோய்கள்

இளமைப் பருவத்தில் துள்ளி விளையாடி சாதனைகள் பல புரிந்தாலும், முதுமையில் அவர்கள் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளம். பல்வேறு நோய்களையும், உடல் தள்ளாட்டத்தையும் அவர்கள் எதிர்கொண்டு வாழவேண்டியது இருக்கிறது.முதுமையில் பலரும் மருத்துவமனைகளில் அடைக்கலமாக வேண்டி உள்ளது.

முதுமையின் விதியை முறியடித்து சாதிப்பவர்கள்

இதுதான் முதுமையின் விதியாக இருந்தாலும், இதை முறியடித்து வாழ்க்கையில் சாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மன உறுதியாலும், உடற்பயிற்சியாலும் அவர்கள் நிமிர்ந்து நின்று சாதனைகளுக்கே சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.அந்த வரிசையில் இடம்பெற்றிருப்பவர், நாமக்கல்லை சேர்ந்த எஸ்.என்.கொளந்தன்.

Tags:    

Similar News