கண்ணில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை

கண்களில் கறுப்பு துணிக் கட்டிக்கொண்டு, தொடர்ந்து, 2 மணி நேரம், சிலம்பம் சுற்றி பள்ளி மாணவ, மாணவியர், உலக சாதனை படைத்தனர்.

Update: 2022-07-31 11:45 GMT

நாமக்கல்லில் 200 மாணவ மாணவிகள் கண்ணைக் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் சார்பில், சிலம்பம் சுற்றுவதில் உலக சாதனை நிகழ்ச்சி, நாமக்கல்லில் நடைபெற்றது. அதில், 6 முதல் 27 வயது வரை 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவன முதன்மை அதிகாரி வினோத் நடுவராக பணியாற்றினார்.

தமிழக முதன்மை தொகுப்பாளர் ஜனனி ஸ்ரீ, பரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை, 10 மணிக்கு துவங்கி, பகல் 12 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் பல்வேறு விதத்தில் சிலம்பம் சுற்றி, சாதனை படைத்தனர். குறிப்பாக, அனைவரும் கண்களை கறுப்புத்துணியால் கட்டிக் கொண்டு, இந்த சாதனை படைத்தனர். இதற்கு முன், சிலம்பம் சுற்றுவதில் ஒன்னறை மணி நேரம் மட்டுமே உலக சாதனையாக இருந்து வந்தது. தற்போது, கூடுதலாக அரை மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவியர் புதிய உலக சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு, கொங்கு நாட்டு வேளாளர் சங்க தலைவர் வெங்கடாசலம் பதக்கம், மற்றும் உலக சாதனைக்கான சான்றிதழ்களை வழங்கினார்.

Tags:    

Similar News