எருமப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக காகித தின விழா கொண்டாட்டம்

namakkal news, namakkal news today- உலக காகித தினத்தையொட்டி, எருமப்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Update: 2023-08-02 06:30 GMT

namakkal news, namakkal news today- எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, உலக காகித தினவிழாவில், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

namakkal news, namakkal news today- பொதுமக்களிடம் காகித பயன்பாட்டை அதிகரிக்க செய்வது, சுற்றுச்சூழலை மேம்படுத்துவது போன்ற காரணங்களுக்காக, இந்திய அளவில், ஆக., 1ம் தேதி உலக காகித தினம் கொண்டாடப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் சார்பில், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக காகித தின விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியோசன் தலைவர் செல்வகுமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், 130மாணவர்களுக்கு மாணவர்களுக்கு நோட்டு புத்தங்கள் வழங்கியதுடன், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புங்கன், வேம்பு, அரசு உள்ளிட்ட 100மரக்கன்றுகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, மாணவர்கள் காகித பயன்பாடுகளை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும், தினந்தோறும் மாணவர்கள் தினசரி நாளிதழ் வாசித்து தங்களின் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் காகித்தின் பயன்பாடுகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியோசன் செயலாளர் ஞானகுமார், பொருளாளர் செந்தில், கலைச்செல்வன், கமலநாதன், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News