நாமக்கல்லில் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்தல் இலவச பயிற்சி

நாமக்கல்லில் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொட்கள் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-04-07 11:15 GMT

கோப்பு படம் 

நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியின் பால்வள அறிவியல் துறையில், பால் பதனிடுதல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழன் ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த பயிற்சி முகாமில் லாபகரமான பால் உற்பத்திக்கான வழி முறைகள், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சிகள் அளிக்கப்ப டுகிறது. பால்கோவா தயாரித்தல், தயிர், மோர், வெண்ணெய், நெய், பன்னீர் போன்ற பால் பொருட்கள் தயாரித்தல், பாலில் இருந்து குலோப் ஜாமுன், ரச குல்லா, பர்பி போன்ற பால் இனிப்புகள் தயாரிப்பது பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்.

பயிற்சியாளர்களுக்கு, அனைத்து வகையான பால் பொருட்கள் உற்பத்தி பற்றிய தொழில் நுட்பமும் வழங்கப்படும். மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்க தேவையான இயந்திரங்கள் வாங்குவது குறித்தும் எடுத்துரைக்கப்படும். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்ப பால்வள அறிவியல் துறை தலைவரை 94434 33346 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News