நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு: நாமக்கல் கலெக்டர் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-11 02:30 GMT

நாமக்கல் மாவட்ட, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

மாவட்டத்தில், விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நகராட்சிகள் மற்றும் டவுன் பஞ்சாயத்துக்களில் 689 வாக்குச்சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிளாக கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப்பதிவின் போது அப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, போலீஸ் அதிகாரிகள், நகராட்சி, டவுன் பஞ்சாயத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

பதற்றமான மற்றும் மிகவம் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், மைக்ரோ பார்வையாளர்கள் நியமனம், கூடுதல் போலீசார் பாதுகாப்பு உள்ளிட்டடை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கோவேந்தன், நகராட்சி கமிஷனர்கள், டவுன்பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News