நாமக்கல்லில் வாகனச்சோதனை: விதிமுறை மீறிய 60 பேர் மீது வழக்கு பதிவு

நாமக்கல்லில், போக்குவரத்து துறையினர் வாகனச் சோதனையில், விதிமுறை மீறிய 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-04-06 01:30 GMT

நாமக்கல் நகரில், விபத்துக்கள் நடப்பதை தடுக்கும் வகையில், வாகன சோதனை நடத்த, போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, நாமக்கல்–திருச்சி ரோட்டில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமா மகேஸ்வரி, ராஜசேகரன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஷாஜகான் மற்றும் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக டூ வீலர்கள் மற்றும் கார்களை நிறுத்தி சோதனை செய்தனர்.சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது. மொபைல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது, டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட, பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறிய, 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News