நாமக்கல்லில் திருவள்ளுவர் ஓவியப்போட்டி 150 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பு
நாமக்கல்லில் நடைபெற்ற திருவள்ளுவர் விழா ஓவியப்போட்டியில் 150க்கும் மேற்பட்ட, மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
நாமக்கல்லில் திருவள்ளுவர் ஓவியப்போட்டி 150 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பு
நாமக்கல், டிச. 16-
நாமக்கல்லில் நடைபெற்ற திருவள்ளுவர் விழா ஓவியப்போட்டியில் 150க்கும் மேற்பட்ட, மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு விழாவை முன்னிட்டு ஓவியப்போட்டி நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில், மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தின் சார்பில், திருவள்ளுவர் தொடர்பான ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் வகுப்பில் இருந்து 4ம் வகுப்பு வரை திருவள்ளுவர் முக ஓவியம், 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை திருவள்ளுவர் முழு உருவ ஓவியம், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திருக்குறள் கதை ஓவியம் வரையும் போட்டிகள் நடைபெற்றன. 150க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது ஓவிய கலைத் திறமையை வெளிப்படுத்தினார்கள். நாமக்கல் மாவட்ட மைய நூலகர் சக்திவேல், 3ம் நிலை நூலகர் தங்கவேல், மைய நூலக வாசகர் வட்ட தலைவர் தில்லை சிவக்குமார், ஓவிய ஆசிரியர்கள் வெங்கடேஷ் , விஜயகுமார், சேகர், மகேந்திரன் மற்றும் ஜவகர் சிறுவர் மன்ற ஆசிரியர்கள் ஓவிய போட்டிகளை நடத்தினர்.
போட்டியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு மைய நூலகம் சார்பாக பங்கேற்பு சான்றிதழ் வழங்கட்டது. சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு வரும் 23ம் தேதி, மைய நூலக வளாகத்தில் காட்சிப் படுத்தப்படும் மேலும் தேர்வு செய்யப்பட்டு ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.