நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2022-க்கான அபிஷேக முன்பதிவு டிச.19ல் துவக்கம்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் 2022ம் ஆண்டிற்கான அபிஷேக பூஜைகளுக்கு வரும் 19ம் தேதி முன்பதிவு துவக்கம்.

Update: 2021-12-10 08:00 GMT

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர்.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் 2022ம் ஆண்டுக்கான அபிசேகம் மற்றும் பூஜைகளுக்கு வரும் 19ம் தேதி முன்பதிவு துவங்குகிறது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியான கோட்டையில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர், சாந்த சொரூபியாக, வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு தினசரி காலையில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு 1,008 வடை மாலை சார்த்தப்படும். பின்னர், நல்லெண்ணெய், நெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் மற்றும் சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.

மதியம் 1 மணியளவில் அபிசேகம் நிறைவு பெற்று, சுவாமிக்கு அலங்காரம் நடைபெறும். பின்னர் தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்க பிரசாதம் வழங்கப்படும். இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் முன்கூட்டியே தங்களுக்க விருப்பமான தேதியில், கட்டளைதாரர்களாக பதிவு செய்து அபிசேகத்தில் கலந்துகொள்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில், அடுத்த ஆண்டிற்கான அபிசேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கான முன்பதிவு திருக்கோயில் அலுவலகத்தில் நடைபெறும். இந்த நிலையில் வருகிற2022ம் ஆண்டுக்கான முன்பதிவு 19ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ரமேஷ் கூறியுள்ளதாவது:- 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், டிசம்பர் மாதம் வரையிலான காலத்துக்கு, தினசரி வடை மாலை மற்றும் அபிஷேகத்துக்கான முன்பதிவு, வரும் 19ம் தேதி தொடங்கு கிறது. கடந்த காலங்களில் ஒரு நாள் அபிசேகத்திற்கு 3 கட்டளைதாரர்கள் வீதம் முன்பதிவு செய்ப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒரு நாள் அபிசேகத்திற்கு 5 கட்டளைதாரர்கள் வீதம் பதிவு செய்ப்படுகிறது. ஒருவருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம், ஒரு நாள் வடைமாலை மற்றும் அபிசேகத்திற்கு 5 பேரிடம் மொத்தம் ரூ.30 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படும். பக்தர்கள் அபிஷேகத்துக்கான முழுத் தொகையை செலுத்தி, முன்பதிவு செய்து ரசீது பெற்றுக்ககொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News