டாஸ்மாக் விற்பனையாளர் கொலையை கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாமக்கல்லில் அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-10-06 12:00 GMT

ஒரகடத்தில்,  டாஸ்மாக் கடை விற்பனையாளர் கொலையை கண்டித்து நாமக்கல்லில் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 4ம் தேதி இரவு, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த துளசிதாஸ்,  மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தமிழக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், கொலையாளிகளை உடனே கைது செய்யவேண்டும், இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், வாரிசுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும், மர்ம நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த மற்றொரு விற்பனையாளர் ராமுவிற்கு, உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து, அனைத்து மருத்துவ செலவையும் அரசே ஏற்கவேண்டும், அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் பார்க் ரோட்டில், அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் திரளான, டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News