அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு ஹோமியோபதி மாத்திரை வழங்கல்

மாணவ மாணவிகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்திக்கான ஹோமியோபதி மாத்திரைகளை, கல்லூரி முதல்வர் முருகன் வழங்கினார்.

Update: 2021-12-22 10:15 GMT

மாணவ மாணவிகளுக்கு,  ஹோமியோபதி மாத்திரைகளை வழங்கிய கல்லூரி முதல்வர் முருகன்.

நாமக்கல் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் ரெட்ரிப்பன் கிளப் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் இயற்கை மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ துறை இணைந்து ஓமியோபதி மருத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முருகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி ஓமியோபதி டாக்டர் கலைச்செல்வி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஓமியோபதி மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப் பயன்படும் ஆர்சனிகம் ஆல்பம் - 30 சி என்ற மருந்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பேசினார்.

வளையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஆயுஷ் மருத்துவ அலுவலர் ராஜகணேசன் ஓமியோபதி மருத்துவ முறைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான ஆர்சனிகம் ஆல்பம் - 30 சி மருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் சங்கத் திட்ட அலுவலர்கள் வெஸ்லி, சந்திரசேகரன், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News