குரு பெயர்ச்சியை முன்னிட்டு உலக நன்மைக்காக நாமக்கல்லில் சிறப்பு யாக பூஜை

யாகசாலை பூஜைகள் ஸ்ரீ பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்று மகா தீபாராதனை நடைபெற்றது

Update: 2023-04-25 02:30 GMT

குரு பெயர்ச்சியை முன்னிட்டு உலக நன்மைக்காக நாமக்கல்லில் நடைபெற்ற சிறப்பு பூஜை

நாமக்கல்லில் சிறப்பு யாக பூஜை

குரு பெயர்ச்சியை முன்னிட்டு உலக நன்மைக்காக, நாமக்கல் ஓம் ஸ்ரீ சித்தி விநாயகர் சந்நிதானத்தில் சிறப்பு யாக பூஜைகள்  ஸ்ரீ சங்கரய்யர் முன்னிலையில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

நாமக்கல், துறையூர் சாலை  கங்கா நகரில் ஓம் ஸ்ரீ சித்தி விநாயகர் சந்நிதானம் உள்ளது. இங்கு, ஸ்ரீ சங்கரய்யர் பூஜைகளை நடத்தி வருகிறார். முன்னாள் பாரத பிரதமர்கள் சந்திரசேகர், தேவகவுடா, முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜானகி உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் ஜோதிட ரீதியான ஆலோனைகள் வழங்கி பிரசித்தி பெற்றவர் ஸ்ரீ சங்கரய்யர். தற்போது குரு பகவான் மீன ராசியில் இருந்த மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். இதையொட்டி, உலக நன்மை வேண்டி, நாமக்கல் ஓம் ஸ்ரீ சித்தி விநாயகர் சந்நிதானத்தில் குரு பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றது.

காலை 6 மணிக்கு ஸ்ரீ சித்தி விநாயகர் பூஜை மற்றும் ஸ்ரீ மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஸ்ரீ நவக்கிரஹ, நட்சத்திர தேவதா பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 9 மணிக்கு ஸ்ரீ குருபகவான் மூலமந்திர பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி மற்றும் குருபகவான் மூலிகா மந்திர ஹோமங்கள் நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் ஸ்ரீ பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ சங்கரய்யர் அருளாசியுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓம் ஸ்ரீ சித்திவிநாயகர் சந்நிதான நிர்வாகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News