தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

Update: 2022-04-14 08:00 GMT

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காலை 8 மணிக்கு சுவாமிக்கு 1,008 வடை மாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 9.30 மணிக்கு 1,008 லிட்டர் பால், தயிர், நெய், நல்லெண்ணெய், திருமஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிசேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீபராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News