நாமக்கல்லில் சிலம்பப்போட்டி: மாணவ, மாணவியர் உற்சாகமுடன் பங்கேற்பு

நாமக்கல்லில் ஏகலைவா கலைக்கூடத்தின் சார்பில் சிலம்பப்போட்டிகளை, டிஆர்ஓ துவக்கி வைத்தார்.

Update: 2021-09-26 03:30 GMT

நாமக்கல்லில், உலக சாதனைக்கான சிலம்பப்போட்டிகளை டிஆர்ஓ துர்காமூர்த்தி துவக்கி வைத்தார். அருகில் ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஷ்கண்ணன்.

ஏகலைவா கலைக்கூடத்தின் சார்பில், கலாம் உலகசாதனைக்கான சிலம்பப் போட்டிகள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி,   நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டியில் 8 வயது சிறுமதி சஞ்சனா, 7 அடி உயரத்தில் கம்பின் மீது நடந்தபடி 1 மணிநேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.

ஜித்தேஷ் என்ற 10 வயது மாணவன், கண்களைக் கட்டிக்கொண்டு 7 அடி உயரத்தில் கம்பின் மீது 1 மணி நேரம் நடந்து சாதனை புரிந்தார். 7 மாத கர்ப்பினி பெண் சினேகா 1 மணி நேரம் தொடர்ந்து இரட்டை சிலம்பம் சுற்றினார். மோகன்ராஜ் என்பவர் ஆணி காலணி அணிந்துகொண்டு சிலம்பம் சுற்றியவாது 1 மணி நேரம் நடந்து சாதனை புரிந்தார். மோகனா கண்களை கட்டிக்கொண்டு நெருப்பு வளையத்திற்குள் இரட்டை கம்பு சுற்றி சாதனை படைத்தார். மேலும் திரளான மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றி தங்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

கலாம்ஸ் உலக சாதன நிறுவனத்தின் தலைவர் குமரவேல், நிர்வாக அலுவலர் ஐகிரி, தீர்ப்பாளர் ரதிஷ் ராஜகோபால் ஆகியோர் நடுவர்களாக இருந்து, சாதனைக்கான சான்றிதழ்களை வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏகலைவா கலைக்கூட தலைவர் நவீந்த், துணைத்தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பளர் மோகனா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News