மணல் குவாரிகளைத் திறக்கக்கோரி 23ம் தேதி மணல் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம்

தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை திறக்கக்கோரி, வரும் 23ம் தேதி மாநில அளவில் மணல் லாரிகள் வேலை நிறுத்தப் போõட்டம் நடைபெற உள்ளது.;

Update: 2025-05-13 09:50 GMT

செல்ல ராஜாமணி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர்.

நாமக்கல், 

இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமயைõளர்கள் சம்மேளனத்தலைவர் செல்லராஜாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகள் தொடர்ந்து மூடப்பட்டதால் 55 ஆயிரம் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு தமிழககத்தில் உடனடியாக அரசு மணல் குவாரிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக் கற்கள் விலையை யூனிட்டுக்கு ரூ. 2,000 வரை உயர்த்தி உள்ளனர். அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், அமைச்சர் நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனால், மணல் லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேச மறுக்கிறார்கள். எங்களுடைய பிரதான கோரிக்கையானது தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகள் திறக்கப்பட வேண்டும், அனைத்து கல்குவாரி, கிரஷர்களை அரசுடைமையாக்கி, ஆன்லைன் மூலம், பொதுமக்களுக்கு ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 23-இல் மாநிலம்தழுவிய அளவில் லாரிகளை இயக்காமல் நிறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதன்பிறகு தொடர் காத்திருப்புப் போராட்டத்தையும் மேற்கொள்ள இருக்கிறோம். இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு, திங்கள்கிழமை கட்டிடப் பொறியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கட்டிட இன்ஜினியர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். மே 23இல் நடைபெறும் மணல் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கட்டிட தொழில் சார்ந்த அனைத்து சங்கங்களிடம் ஆதரவு கோரி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

Similar News