மல்லசமுத்திரத்தில் கொங்கு சங்கம் குடும்ப விழா
மல்லசமுத்திரத்தில், கொங்கு நலச்சங்கம் முதலாமாண்டு, குடும்ப விழாவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற கொங்கு மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது;
மல்லசமுத்திரத்தில் கொங்கு சங்கம் குடும்ப விழா
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், கருமனூர் காகத்தலை அம்மன் கோவிலில் நேற்று, கொங்கு நலச்சங்கத்தின் முதலாமாண்டு விழா மற்றும் குடும்ப விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவினை சங்க தலைவர் சிவசங்கர் தலைமையிலான குழு நடத்தியது. செயலாளர் முத்துக்குமார் மற்றும் பொருளாளர் தனசேகர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி சுபாஷ்வேலு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிளஸ் 2 பொதுத்தேர்வில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற கொங்கு மாணவ, மாணவியர்களும் மேடையில் பாராட்டப்பட்டு, ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக சென்னை கொங்கு நண்பர்கள் சங்க துணைத் தலைவர் வீரப்பன் கலந்து கொண்டு விழாவில் சிறப்புரையாற்றினார். விழாவின் இறுதியில் நிர்வாகி ராஜபிரியா நன்றி உரையாற்றி நிகழ்ச்சிக்கு இனிமையான நிறைவு அளித்தார்.