காவிரி ஆற்றில் தண்ணீர் திருடுவதைத் தடுக்க ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை

காவிரி ஆற்றில் இருந்து அனுமதியின்றி குழாய் அமைத்து தண்ணீர் திருடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

Update: 2022-07-19 01:45 GMT

காவிரி ஆற்றில் தண்ணீர் திருடுவதை தடுக்கக் கோரி, ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்திருந்தனர்.

இது குறித்து, ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

பரமத்தி வேலூர் அருகே வடகரையாத்தூர், திருச்செங்கோடு அருகே மொளசி கிராமத்தில் விவசாயிகள் சங்கத்தினர் நீரேற்றுப் பாசனக் கிணறு அமைத்துள்ளனர். காவிரி ஆற்றில் இருந்து சிறிது தூரத்தில் இந்த நீரேற்றுப் பாசனக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் ஊறும் தண்ணீரை மட்டுமே சங்கத்தினர் பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை. எனினும், மேற்குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள நீரேற்றுப் பாசன விவசாய சங்கத்தினர் பாசனக் கிணற்றில் இருந்து காவிரி காவிரி ஆறு வரை நிலத்துக்கடியில் குழாய் அமைத்து தண்ணீர் திருடுகின்றனர்.

இவ்வாறு செய்வதால் ராஜா, கொமாரபாளையம், மோகனூர் வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால் பாசன விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும். எனவே சட்ட விரோதமாக காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திருடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று அவர் கோரியுள்ளனர்.

Tags:    

Similar News