இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு: நாமக்கல்லில் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.4.50 லட்சம் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு. அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2022-06-18 00:30 GMT

பைல் படம்

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.4.50 லட்சம் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததால், சேலம் கோட்ட அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், தோளூர்பட்டியை சேர்ந்தவர் பூசாரி பரமசிவம் (56). அவர் கடந்தம் 2009ம் ஆ"ணடுநாமக்கல்–சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள, வேட்டாம்பாடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, தனது மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த அரசு டவுன் பஸ் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பரமசிவம் அதே இடத்தில் உயிரிழந்தார்.

இது சம்மந்தமாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, நாமக்கல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 2012ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரூ. 2.20 லட்சம் இழப்பீடு வழங்க, சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். போக்குவரத்து கழகநிர்வாகம் இதுவரை இழப்பீட இழப்பீடு வழங்காததால், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து வட்டியுடன் சேர்த்து ரூ. 4.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்காத அரசு பஸ்சை ஜப்தி செய்ய, கடந்த ஏப். 20ம் தேதி நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார். இதையொட்டி, நேற்று, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் கோர்ட் அலுவலர்கள் முன்னிலையில், காரவள்ளி செல்லும் அரசு டவுன் பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Tags:    

Similar News