புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-07-30 12:00 GMT

புதுச்சத்திரம் ஒன்றியம் பாப்பிநாய்க்கன்பட்டி அரசு பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்த, கலெக்டர் ஸ்ரேயாசிங் அங்கு படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், செல்லப்பம்பட்டி பஞ்சாயத்தில், ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் 106 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் செல்லப்பம்பட்டி பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் கட்டுமானப் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டார். தாளம்பாடி குடித்தெருவில் 99 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டார்.

கரடிப்பட்டி பஞ்சாயத்து பள்ளிப்பட்டி முதல் எரமநாய்க்கனூர் வரை 400 மீட்டர் நீளத்திற்கு தார் ரோடு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட கலெக்டர், சாலையின் தரம் குறித்து துளையிட்டு சரியான அளவிலான கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார்.

கரடிப்பட்டி பஞ்சாயத்தில், ரூ.16.54 லட்சம் மதிப்பீட்டில் பாப்பிநாய்க்கன்பட்டி அரசு பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கட்டும் பணியினை பார்வையிட்டு, அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஏழூர் பஞ்சாயத்தில் வேப்பம்பட்டி மாதிரி பள்ளியில் ரூ.19.85 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி முழுவதும் டைல்ஸ் தரை போடப்பட்டுள்ளதை பார்வையிட்டு, ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். ஆய்வின் போது டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News