பொதுமக்களின் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கலெக்டர் உ த்தரவு

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நாமக்கல் கலெக்டர் உ த்தரவிட்டுள்ளார்.

Update: 2021-09-27 12:30 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில், கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 278 மனுக்களை கலெக்ரிடம் அளித்தனர்.

பின்னர், அலுவலகத்தின் தரை தளத்தில், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்த கலெக்டர் அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பொதுமக்களிடம் இருந்து பெற்ற கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிய கலெக்டர், அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ துர்காமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News