மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி விசைத்தறி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

Electricity In Tamil - மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.

Update: 2022-08-09 02:00 GMT

மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

Electricity In Tamil - இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு விசைத்தறித் தொழில் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இத்தொழில் கடந்த 6 ஆண்டுகளாக பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொரோனாஊரடங்கு, நூல் நிலை உயர்வு போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துணிக்கு போதிய விலை கிடைக்காததால் பாதி உற்பத்தி தான் நடைபெறுகிறது. இதனால் விசைத்தறிக் கூடங்களில் உள்ள விசைத்தறி இயந்திரங்கள் எடை போட்டு விற்பனை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இச்சூழலில் 32 சதவீத மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நலிவடைந்த தொழிலை முற்றிலும் முடக்கும் வகையில் உள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தொழிலை பாதுகாக்கும் வகையில் மின் கட்டண உய்வை ரத்து செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.    


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News