நாமக்கல்லில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

நாமக்கல்லில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

Update: 2022-03-27 08:45 GMT

நாமக்கல் பஸ் நிலையத்தில் நடைபெற்ற, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்துப் பார்வையிட்டனர்.

நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நாமக்கல் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவிற்கு டிஆர்ஓ கதிரேசன் தலைமை வகித்தார். ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கண்காட்சியை திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

புகைப்படக் கண்காட்சியில் தமிழக முதல்வர் துபாய் நாட்டில் கலந்துகொண்டு தொழிலதிபர்களுடன் பேசிய நிகழ்ச்சி, கொரோனா தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி, அரசு பள்ளிகளில் படித்து தொழிற்படிப்புகளில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டு, மாணவர்களுக்கு அதற்கான உத்தரவினை வழங்கிய நிகழ்ச்சி, இந்தியா டுடே சுற்றுலா மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்ட விருதினை, சுற்றுலாத்துறை அமைச்சர் தமிழக முதல்வரிடம் வழங்கிய நிகழ்ச்சி. 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்ட நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட முகாம், திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி போடும் முகாம், மக்களைத்தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ், உயிர்காக்கப்பட்ட நாமக்கல் சிறுவனுடன் முதல்வர் செல்போனில் பேசிய நிகழ்ச்சி உள்ளிட்ட புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, பிஆர்ஓ சீனிவாசன், நகராட்சி கமிஷனர் சுதா, ஏபிஆர்ஓ கோகுல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திரளான பொதுமக்கள் கண்காட்சியினை பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டனர்.

Tags:    

Similar News