தனியார் குளுக்கோஸ் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாமக்கல் கலெக்டரிடம் மனு

Collector Petition- தனியார் குளுக்கோஸ் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாமக்கல் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2022-09-27 01:15 GMT

நாமக்கல் அருகே தனியார்  குளுக்கோஸ் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மனு கொடுக்க வந்த கிராம மக்கள்.

Collector Petition- நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தில் உள்ள தனியார் குளுக்கோஸ் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மங்களபுரம் பகுதி பொதுமக்கள் நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

ராசிபுரம் தாலுகா மங்களபுரம் கிராமத்திற்கு உட்பட்ட பரவக்காட்டில் தனியார் குளுக்கோஸ் தயாரிப்பு ஆலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் கிராமத்தைச் சுற்றியுள்ள 7 கி.மீ. தொலைவுக்கு மண்வளம், நீர் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இத் தொழிற்சாலை நிர்வாகம் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் 20 ஏக்கர் நிலத்தில் ஏரி போல் கழிவுநீரை தேக்கி வைத்துள்ளது. இதனால் நீர் ஊற்று உள்ள தாரைகள் வழியாக பல கிராமங்களில் நிலத்தடி நீர் ரசாயனம் கலந்த துர்நாற்றத்துடன் கிடைக்கிறது. காற்றில் சாம்பல் நிறத்துடன் கூடிய கரித்துகள்கள் பரவி வருகிறது. அதனால் கடந்த ஜூன் மாதம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் ஆலை மூடப்பட்டடது. இச்சூழலில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கடந்த ஆக., 15ம் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்தில் இந்த ஆலையை நிரந்தமாக மூட தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். எனவே ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News