நாமக்கல் எம்பி.,க்கு மீண்டும் ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு

நாமக்கல்லைச் சேர்ந்த எம்.பி ராஜேஷ்குமார், மீண்டும் திமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-05-15 08:30 GMT

ராஜேஷ்குமார். எம்.பி.,

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள ராஜேஷ்குமார், கடந்த ஆண்டு முதல் திமுக ராஜ்சயசபா எம்.பியாக பணியாற்றி வருகிறார். இவருடைய பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் முடிவடைகிறது. வருகின்ற ஜூன் மாதம் 10ம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள, 6 ராஜ்யசபா எம்.பிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் திமுக சார்பில் 3 இடங்களுக்கும், காங்கிரஸ் சார்பில் ஒரு இடங்களுக்கும் எம்.பி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக சார்பில் 3 இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் தஞ்சை கல்யாணசுந்தரம், நாமக்கல் ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மூவரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது. நாமக்கல் ராஜேஷ்குமார் எம்.பி, மீண்டும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Tags:    

Similar News