நாமக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் அதிகாரிகளுடன் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-10-31 09:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து, அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல், 1 முதல் முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்பட உள்ளதை முன்னிட்டு, அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், சமையலறை மற்றும் கழிப்பறைகள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளியின் அனைத்து இடங்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியின் நுழைவாயிலிலும், மாணவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். வகுப்பறையில் போதிய சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்க வேண்டும்.

மாணவர் எண்ணிக்கை அதிகளவில் இருந்து வகுப்பறைகள் குறைவாக இருந்தால், கழற்சி முறையில் வகுப்புகைள நடத்த வேண்டும். நடமாடும் மருத்துவக் குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் டாக்டர்களின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும், தலைமை ஆசிரியர் அறையிலும் எழுதப்பட வேண்டும்.

மழைக் காலங்களில் பள்ளி வளாகத்தினுள் மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கு பெற வருகை புரிவதால் அவர்களை உளவியல் ரீதியாக தயார் படுத்திட வேண்டும். நேர்மறை சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

வாய்மொழிப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி, கதைகள் கூறுதல் மற்றம் ஓவியம் வரைதல் போன்ற செயல்பாடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆர்டிஓக்கள், தாசில்தார்கள், பிடிஓக்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அடிக்கடி பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்யவேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ துர்காமூர்த்தி, டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், ஆர்டிஓக்கள் நாமக்கல் மஞ்சுளா, திருச்செங்கோடு இளவரசி, சிஇஓ (பொ) ராமன், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பல்வறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News