நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-10 10:30 GMT

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம பஞ்சாயத்துக்களில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறும்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 322 கிராம பஞ்சாயத்துகளில், வரும் 15ம் தேதி சுதந்திரத்தினத்தன்று, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வறுமை ஒழிப்புத் திட்டம் உட்பட அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்களினால், தனிநபர் மற்றும் சமுதாயத்தினர் ஒவ்வொரு திட்டத்தின் கீழும் பயன்பெறும் தன்மை குறித்து விளக்க வேண்டும். கிராம பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும்.

அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுதல், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், திட்டங்கள் மற்றும் நிதிக்குழு மானிய நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளின் விபரம் குறித்து விளக்கி கூறவேண்டும். ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நீர்வழிப்பாதை மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து விவாதிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News