நாமக்கல்லில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தியாகி காளியண்ணன் பிறந்த நாள் விழா
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மறைந்த தியாகி காளியண்ணன் 104வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.;
நாமக்கல்லில் நடைபெற்ற, மறைந்த காங்கிரஸ் தியாகி காளியண்ணனின் 104வது பிறந்த நாள் விழாவில், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நாமக்கல்லில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தியாகி காளியண்ணன் பிறந்த நாள் விழா
நாமக்கல்,
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மறைந்த தியாகி காளியண்ணன் 104வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மறைந்த இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினரும், சுதந்திர இந்தியாவின் முதல் பார்லிமெண்ட் எம்.பியுமான தியாகி காளியண்ணனின் 104வது பிறந்தநாள் விழா, நாமக்கல் பரமத்திரோடு-மோகனூர் ரோடு சந்திப்பில் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். கொங்கு வேளாளர் சங்கத்தலைவர் வெங்கடாசலம், மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாக்டர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரப்பன், மாநகர காங்கிரஸ் தலைவர் மோகன், வட்டார தலைவர்கள் தங்கராஜ், இளங்கோ சாந்திமணி, லோகநாதன், ராஜேந்திரன் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.