நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் புதிய நீதிபதி பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் புதிய நீதிபதியாக தமிழ்செல்வி மற்றும் புதிய உறுப்பினராக முத்துக்குமார் பொறுப்பேற்றனர்.

Update: 2022-03-28 07:15 GMT

நாமக்கல் நுகர்வோர் கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்ற தமிழ்செல்விக்கு, தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் புதிய நீதிபதியாக தமிழ்செல்வி மற்றும் புதிய உறுப்பினராக முத்துக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் புதிய நீதிபதியாக தமிழ்செல்வி நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். நுகர்வோர் கோர்ட் உறுப்பினராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்த செல்வநாதன் ஓய்பெற்றார். இதையொட்டி புதிய உறுபினராக முத்துக்குமார் பொறுப்பேற்றார். புதிய நீதிபதி மற்றும் உறுப்பினருக்கு வரவேற்பு விழாவும், ஓய்வுபெற்ற உறுப்பினருக்கு பிரிவு உபசார விழாவும் கோர்ட் வளாகத்தில் நடைபெற்றது. கோர்ட் தலைமை எழுத்தர் சந்திரா வரவேற்றார்.

தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நீதிபதி மற்றும் உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கோர்ட் அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர். விழாவில் வக்கீல் கிருஷ்ண சேகர், தமிழ்நாடு நுகர்வோர் புலனாய்வு கமிட்டி இணை செயலாளர் குணசேகரன் மற்றும் கோர்ட் அலுவலர்கள் ராஜேஷ், ரவி, நாகராஜ், ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News