நாமக்கல் அருகே 3,360 கிலோ ரேஷன் அரிசி கடத்திய மினி லாரி பறிமுதல்: ஒருவர் கைது
நாமக்கல் அருகே 3,360 கிலோ ரேஷன் அரிசி கடத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
நாமக்கல் அருகே 3,360 கிலோ ரேஷன் அரிசி கடத்திய மினி லாரி பறிமுதல்: ஒருவர் கைது
நாமக்கல்,
நாமக்கல் அருகே 3,360 கிலோ ரேஷன் அரிசி கடத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையம் பகுதியில், நாமக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி சரக்கு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 84 மூட்டைகளில் 3,360 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது.
அரிசியைக் கைப்பற்றிய போலீசார், வண்டியை ஓட்டிவந்த, பரமத்தி வேலூர் அடுத்த குப்புச்சி பாளையம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (28) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு லாரியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.