நாமக்கல் வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்

நாமக்கல் கடைவீதியில் உள்ள வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-10-02 00:15 GMT

நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

நாமக்கல் கடைவீதியில் உள்ள வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆயம், நாமக்கல் கடைவீதியில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த செப்.26ம் தேதி முதல் நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினசாரி காலை 6.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7.30 மணிக்கு, கட்டளைதாரர் சங்கல்பம் அபிஷேகம், வேதபாராயணம், 8:30 மணிக்கு கவச சேவை, அர்ச்சனை மற்றும் சஹஸ்ரநாமம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து காலை 9 மணிக்கு அலங்கார தீபாராதனை, பகல் 1 மணிக்கு லலிதா தேவி பூஜை, இரவு 8 மணிக்கு, கொலு மண்டபத்தில் அலங்கார தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

கடந்த 26ம் தேதி, மீனாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி, தொடர்ந்து ஜெயதுர்கா, காஞ்சி காமாட்சி, மகாலட்சுமி, ராஜராஜேஸ்வரி அலங்கரத்தில் வெள்ளி சப்பரத்தில் ஆண்டாள் எழுந்தருளினார். நேற்று திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. வரும் 4ம் தேதி காமதேனு வாகனத்தில் சரஸ்வதி அலங்காரம், 5ம் தேதி ஜம்பு சவாரி வைபவமம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News