நாமக்கல்லில் தேசிய லோக் அதாலத்: ரூ.13.68 கோடி மதிப்பீட்டில் தீர்வு

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ரூ.13.68 கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2021-09-12 03:00 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு நிவாரணத்தொகைக்கான உத்தரவை மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் வழங்கினார்.

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நீதிபதிகள் பாலசுப்ரமணியம், சாந்தி, சுந்தரய்யா, சரவணன், ஸ்ரீவித்யா, முருகன், பாரி, விஜய் அழகிரி, மாலதி, தமயந்தி, ஜெயந்தி, விஜயன் மற்றும் வக்கீல்கள் சதீஸ்குமார், ராகுலன், லட்சுமணசாமி, முத்து மற்றும் பிரபாகரன் ஆகியோர் கொண்ட அமர்வு மூலம் வழக்குகள் விசாரணை நடைபெற்றது.

இந்த நீதிமன்றத்தில், விபத்து தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின்பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளபட்டது.

நீதிமன்றத்தில் மொத்தம் 1030 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டன. அதில் 356 வழக்குகள் பைசல் செய்யப்பட்டன. மொத்தம் ரூ.13,68,78,750 மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது. திருச்செங்கோடு, இராசிபுரம் மற்றும் பரமத்தி கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News