ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

நாமக்கல் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பாக 2.50 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செரிவூட்டிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டது.

Update: 2021-06-24 04:45 GMT

ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் வழங்கபட்டது. அருகில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் சோமசுந்தரம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் சமயத்தில் உயிர் காக்கும் கருவியாக ஆக்சிஜன் செரிவூட்டிகள் பயன்படுகின்றன. தமிழ்நாடு மாநில ரெட்கிராஸ் சொசைட்டில் சார்பாக பெறப்பட்ட 3 ஆக்சிஜன் செரிவூட்டிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம், நாமக்கல் மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் ராஜேஸ் கண்ணன், துணைத்தலைவர் மாதையன், பொருளாளர் கோபுமாதவன்மற்றும் செயற்குழு உறுப்பினர் அந்தோணி ஜெனிட் ஆகியோர் வழங்கினர்.

கலெக்டர் அவற்றை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரத்திடம் வழங்கினார். அந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் நாமக்கல் மற்றும் முதலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயன்படுத்தப்படும்.

Tags:    

Similar News