சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

namakkal news, namakkal news today- வளையப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-14 03:45 GMT

namakkal news, namakkal news today- வளையப்பட்டியில் சிப்காப் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமானவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், ஆண்டாபுரம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் தமிழக அரசின் சிப்காட் மூலம் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி தொழிற்பேட்டை அமைப்பதற்கான நிலம் அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வளையப்பட்டி பகுதியில் தொழிற்பேட்டை அமைத்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, விவசாய முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இது சம்மந்தமாக சிப்காட் எதிர்ப்புக்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி, வளையப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை தடை செய்யக்கோரி தொடர்ந்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், திண்ணை பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், வளையப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாய முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின், மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழுந்தைகள் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி சிப்காட்டை விவசாய விளை நிலங்களில் அமைக்ககூடாது என கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News