ஆன்லைன் மூலம் வேலை தருவதாக ரூ. 1.20 லட்சம் மோசடி : போலீசார் வழக்குப்பதிவு

namakkal news, namakkal news today- நாமக்கல்லில் ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை தருவதாக கூறி கல்லூரி மாணவியிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-14 06:45 GMT

namakkal news, namakkal news today- கல்லூரி மாணவியிடம் ரூ. 1.20 லட்சம் மோசடி; போலீசார் விசாரணை (கோப்பு படம்)

namakkal news, namakkal news today- நாமக்கல் நகரைச் சேர்ந்தவர் சாகுல்அமீது. இவரது மகள் ஷெலிகா பேகம் (20), இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் பகுதிநேர வேலையை தேடி வந்தார். சில நாட்களில் அவருக்கு ஆன்லைனில் ஆன்லைனில் வேலை கிடைத்து விட்டதாக தகவல் வந்தது. மேலும்அவர்கள் ஒரு வெப்சைட்டிற்கான லிங்க்கை அனுப்பி வைத்தனர்.

அந்த லிங்க்கில் கொடுக்கப்படும் டாஸ்க் மூலம் பணியை தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. முதலில் டாஸ்கை செய்ய குறைந்தபட்ச தொகை டெபாசிட் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்தது. அந்த தொகையை செலுத்தி பணியை தொடர்ந்தார். இவ்வாறு 18 தவணைகளாக சிறிய, சிறிய தொகையாக ஷெலிகா பேகம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார். மேலும் பணியை தொடர மேலும் கூடுதலாக பணம் அனுப்ப வேண்டும் என தகவல் வந்தது.

இதனால் சந்தோகப்பட்ட ஷெலிகா பேகம், தன்னிடம் இனி அனுப்புவதற்கு பணம் இல்லை, எனக்கு வேலை வேண்டாம், இதுவரை நான் அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்புங்கள் என கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் எந்த எவ்வித பதிலும் தரவில்லை. செல்போன் மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஷெலிகா போகம் இது குறித்து, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News