நாமக்கல் நகராட்சி பகுதியில் பாதியில் விடப்பட்ட சாலை பணிகள்: பொதுமக்கள் புகார்

நாமக்கல் நகராட்சி பகுதியில் பாதியில் விடப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-08-13 12:30 GMT

நாமக்கல் நகராட்சி 39வது வார்டு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி பாதியில் விடப்பட்டுள்ளதால் சாலை முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாமல், கற்கல் குவியலாய் கிடக்கின்றன.

நாமக்கல் :

நாமக்கல் நகராட்சி பகுதியில் பாதியில் விடப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 39 வார்டுகளிலும் ஜேடர்பாளையம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்றது. இதனால் சாலைகளில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. பணிகள் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவு பெற்றது. எனவே, சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஆட்சியில் துவக்கப்பட்டது. இதில் சுமார் 75 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதி பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளன. நாமக்கல் முல்லை நகர், அழகு நகர் போன்ற பகுதிகளில் தசர் சாலை அமைப்பதற்காக, கான்ட்ராக்டர்கள் ரோட்டை பொக்லைன் வாகனம் மூலம் தோண்டிப் போட்டுள்ளனர்.

ஆனால் பணிகள் எதுவும் நிறைவு பெறவில்லை. தார் சாலைகள் முழுவதும் கற்கள் குவியலாய் கொட்டப்பட்டுள்ளன. இதனால் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் இடறி விழுகின்றனர். மேழும் வாகனங்கள் பஞ்சர் ஏற்படுகிறது. எனவே பாதியில் விடப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நகராட்சிக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News