நாமக்கல்லில் முட்டை விலை 30 பைசா சரிவு: பண்ணையாளர்கள் பாதிப்பு

நாமக்கல்லில் முட்டை விலை 30 பைசா சரிவு தொடர் விலை சரிவால் பண்ணையாளர்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

Update: 2022-04-23 01:00 GMT

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1000 கோழிப்பண்ணைகளில் 5 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த பண்ணைகளில் தினசரி சுமார் 4.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தியாகும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடு ஏற்றுமதிக்கும் மற்றும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்கும் தினசரி லாரிகள் மூலம் அனுபி வைக்கப்படுகின்றன.

முட்டை விற்பனை விலையை, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நிர்ணயிக்கப்படும் முட்டை விலையை அனுசரித்து, தமிழகத்திலும் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த ஏப். 1ம் தேதி ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 4 ஆக என் இசிசி நிர்ணயம் செய்தது. அதையடுத்து, 6ம் தேதி 4.20, 8ம் தேதி 4.35, 10ம் தேதி 4.45, 13ம் தேதி 450 என, படிப்படியாக முட்டை விலை உயர்ந்தது. இந்த நிலையில் 15ம் தேதி 20 பைசா குறைந்து ரூ. 4.30, 20ம் தேதி மீண்டும் 20 பைசா குறைந்து ரூ. 4.10 என கொள்முதல் சரியத்தொடங்கியது.

இந்த நிலையில், இன்று மீண்டும் 30 காசு குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 3.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் முட்டை விற்பனையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு 30 பைசா குறைத்து விற்பனை செய்யலாம் என நெஸ்பாக் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.3.50 மட்டுமே கிடைக்கும். முட்டை விலை தொடர் சரிவால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை 435, பர்வாலா 300, பெங்களூர் 405, டெல்லி 340, ஹைதராபாத் 320, மும்பை 385, மைசூர் 407, விஜயவாடா 360, ஹொஸ்பேட் 365, கொல்கத்தா 420.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 116 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.78 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News