நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக சரவணன் பொறுப்பேற்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவராக சரவணன் பொறுப்பேற்றார்.;

Update: 2025-01-19 11:00 GMT

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவராக பொறுப்பேற்ற சரவணன்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவராக சரவணன் பொறுப்பேற்றார்.

இந்தியா முழுவதும் பாஜ கட்சியின் அமைப்பு தேர்தல் கடந்த செப். மாதம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாரத பிரதமர் மோடி முதல் அனைவரும் மீண்டும் தங்களை கட்சியின் உறுப்பினராக இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு புதிய பாஜ உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே தமிழகம் முழுவுதம் அனைத்து மாவட்டங்களிலும், ஒன்றியம், டவுன் பஞ்சாயத்து மற்றும நகர தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்வு செய்யபட்டனர். அதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக மாவட்ட தலைவர் தேர்தல் நடைபெற்றது. கட்சியின் சட்ட விதிகளின்படி கட்சி நிர்வாகிகள் ஓட்டுப்போட்டு மாவட்ட தலைவர்களை தேர்வு செய்தனர்.

நேற்று தமிழகத்தில் 33 மாவட்ட தலைவர்களின் பெயர் பட்டியல் மாநில தலைவர் அண்ணாமலையில் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட கட்சி ஆபீசில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் குழு தலைவர் சத்தியபானு தலைமை வகித்தார். கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கிழக்கு மாவட்ட பாஜ தலைவராக சரவணனை அறிவித்தார். தொடர்ந்து அவர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டு பேசினார். தனியார் பள்ளி ஒன்றின் சேர்மனான சரவணன், ஏற்கனவே நாமக்கல் நகர பாஜ தலைவராக பணியாற்றி வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News