பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பியதால் நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் கடும் பயணிகள் நெரிசல்

பொங்கல் லீவ் முடிவடைந்து ஏராளமானவர்கள் ஊருக்கு திரும்பியதால், நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது;

Update: 2025-01-19 11:15 GMT

பொங்கல் பண்டிகை முடிந்து, ஊர் திரும்பியதால், நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டிடல் பயணிகள் நெரிசல் அதிகமாக இருந்தது.

பொங்கல் லீவ் முடிவடைந்து ஏராளமானவர்கள் ஊருக்கு திரும்பியதால், இன்று நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தமிழகம் முழுவதும் கடந்த 11ம் தேதி முதல், இன்று 19ம் தேதி வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டது. இதனால் வெளியூர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் படித்தவர்கள், அலுவலகங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்த நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். அவர்கள் 9 நாட்கள் உற்சாகமாக விடுமுறையை கொண்டாடிவிட்டு, நேற்று மீண்டும் பணிக்கு திரும்பினார்கள். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்ததால், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நெரிசல் அதிகரித்தது.

குறிப்பாக சேலம், ஈரோடு, கோவை, மதுரை, திருச்சி பஸ்களில், முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். மேலும், பஸ்களில் உட்கார இடம் கிடைக்காமல் ஏராளமான பயணிகள் நெரிசலாக நின்றபடி பயணித்தனர். தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பல நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. குறிப்பாக, ஈரோட்டிற்கு 30 பஸ்கள், திருச்சிக்கு 25 பஸ்கள், துறையூருக்கு 10 பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும், சென்னைக்கு முன்பதிவு செய்து 20 பஸ்கள் இயக்கப்பட்டது. நாமக்கல் டெப்போவில் இருந்து மொத்தம் 85 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

Similar News