தபால் அலுவலக தங்கப்பத்திர முதலீட்டில் நாமக்கல் கோட்டம் தேசிய அளவில் முதலிடம்

தபால் அலுவலக தங்க பத்திர முதலீட்டில் நாமக்கல் கோட்டம் தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

Update: 2022-03-05 10:45 GMT

பைல் படம்.

நாமககல் தபால் கோட்டத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 28 முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை தங்க பத்திரத் திட்ட முதலீடு நடைபெற்றது. ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.5,109 என்று நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் கோட்டத்தில் 3,873 கிராம் அளவில் தங்க பத்திரம் விற்பனை செய்யப்பட்டது. இதனால், தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நாமக்கல் கோட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 3 தங்க பத்திர வெளியீடுகளில் 2 முறை தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி மாதம் 28 முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை 5 நாட்களில் நடைபெற்ற மொத்த முதலீட்டின் மதிப்பு ரூ.1,97,87,157 ஆகும். இந்த முறை தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்ய வாய்ப்பை தவற விட்டவர்கள் அடுத்தடுத்து வரக்கூடிய தங்க பத்திர வெளியீட்டில் முதலீடு செய்து பயன்பெறலாம் என நாமக்கல் தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News