நாமக்கல் மாவட்டத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா தொற்று

நாமக்கல் மாவடத்தில் இன்று ஒரு நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-08-27 13:45 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 27ம் தேதி ஒரே நாளில் நாமக்கல், இராசிபும், சேந்தமங்கலம், எருமப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மோகனூர், பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், பெரியமணலி உள்ளிட்ட பகுதிகளில் 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகள், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், கோவை உள்ளிட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இன்று ஒரு நாளில் 45 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினர். 558 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48,626 ஆக உயர்ந்துள்ளது. 47,601 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். இதுவரை மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News