நாமக்கல் பகுதியில் நீண்ட நாட்களுக்குப்பின் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-08-08 03:00 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கனமழை பெய்ததால் விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2 மாதங்களாக பருவமழை பெய்து வருகிறது. இருப்பினும் நாமக்கல் மாவட்டத்தில் வழக்கத்தைவிட குறைவான அளவே மழை பெய்துள்ளது. இதனால் ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

நாமக்கல் நகரில் தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆடி மாதத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உழவுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு விபரம்:

குமாரபாளையம் 46 மி.மீ., நாமக்கல் 34 மி.மீ, கலெக்டர் அலுவலகம் 28 மி.மீ, பரமத்திவேலூர் 6 மி.மீ, புதுச்சத்திரம் 2 மி.மீ, சேந்தமங்கலம் 7 மி.மீ, திருச்செங்கோடு 7 மி.மீ. மாவட்டத்தில் மொத்தம்130.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 

Tags:    

Similar News