நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2021-09-06 02:15 GMT

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. திருச்செங்கோடு, இராசிபுரம், மல்லசமத்திரம், சேந்தமங்கலம்,கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

நாமக்கல் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை கனமழை பெய்தது. மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியாதல் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது.

இதனால் டூ வீலர்களில் சென்றவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தொடர்மழையால் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் உழவுப்பணிகளை துவக்கியுள்ளனர். பல இடங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் நிலக்கடலை, சோளம், கம்பு, ராகி போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்: எருமப்பட்டி15 மி.மீ, குமாரபாளையம் 12.40 மி.மீ, மங்களபுரம் 15.80 மி.மீ, நாமக்கல் 25 மி.மீ, பரமத்திவேலூர் 2 மி.மீ, புதுச்சத்திரம் 8 மி.மீ, ராசிபுரம் 12.40 மி.மீ, சேந்தமங்கலம் 48 மி.மீ, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் 15 மி.மீ, கொல்லிமலை செம்மேடு மி.மீ. மாவட்டத்தில் மொத்தம் 224.6 மி.மீ மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News