நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு: 176 பள்ளிகளில் 18 ஆயிரம் பேர் அட்மிஷன்

நாமக்கல் மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 6ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில் 18 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.

Update: 2021-07-13 12:15 GMT

நாமக்கல் மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 6ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில் 18 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, 2020 மார்ச் 25 முதல், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுதாத நிலையில் ஆல் பாஸ் போடப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டிலும், இதுவரை, பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி அளித்ததை அடுத்து, பள்ளிக்கல்வித்துறை தீவிர மாணவர் சேர்க்கையை துவக்கியுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என, 71 உயர்நிலைப்பள்ளிகள், 105 மேல்நிலைப்பள்ளி, என மொத்தம், 176 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், கடந்த 28ம் தேதி முதல் மாணவ, மாணவியர் சேர்க்கை துவங்கியது. 6ம் வகுப்பில், 7,430 மாணவ மாணவிகளும், பிளஸ் 1ல் 10 ஆயிரத்து 638 பேர் என மொத்தம் 18 ஆயிரத்து 68 மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதில், 6ம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பில், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, தனியார் சுயநிதி பள்ளிகளில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் அரசு பள்ளியை நாடி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி, பள்ளிக்கட்டணம் போன்றவற்றால் பல பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தொடங்கியுள்ளனர். இதனால் அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இதுவரை 10 முதல், 15 சதவீதம் வரை மாணவ மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News