நாமக்கல்: ராகுல்காந்தி மீதான நடவடிக்கை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் ராகுல்காந்தி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கையை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-17 09:00 GMT

நாமக்கல்லில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்ட நடத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்பி. மீதான அமலாக்கத் துறை  நடவடிக்கை, அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில்  போலீஸ் செய்ததாக கூறியும் அதனை கண்டித்தும், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்தார்.

போராட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வீரப்பன், செல்வராஜ், முன்னாள் நாமகிரிபேட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் புள்ளியப்பன், நாமக்கல் நகர காங்கிரஸ் தலைவர் மோகன், ராசிபுரம் நகர காங்கிரஸ் தலைவர் முரளி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் புதுச்சத்திரம் இளங்கோ, எருமப்பட்டி தங்கராஜ், நாமகிரிப்பேட்டை ரங்கசாமி, நமக்கல் ரகு, கொல்லிமலை குப்புசாமி, டவுன்பஞ்சாயத்து காங்கிரஸ் தலைவர் மோகனூர் காங்கிரஸ், மோகனூர் சீனிவாசன், நாமகிரிப்பேட்டை இளங்கோ, வேலூர் பெரியசாமி, ஆர். புதுப்பட்டி தனவேல், எருமப்பட்டி செல்வசேகரன், மகளிர் காங்கிரஸ் கன்னியம்மாள், பொறியாளர் பொன்முடி முதலானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News