நாமக்கல் புத்தகத்திருவிழா; 2ம் நாள் நிகழ்ச்சியில் பேச்சாளர் சுகிசிவம் பங்கேற்பு

Namakkal news- நாமக்கல்லில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் இலக்கியப் பேச்சாளர் சுகிசிவம் கலந்துகொண்டு பேசினார்.

Update: 2024-01-28 06:45 GMT

Namakkal news- நாமக்கல்லில் நடந்துவரும் புத்தக்திருவிழா 2ம் நாள் நிகழ்ச்ச்சியில், இலக்கியப் பேச்சாளர் சுகிசிவம் பேசினார்.

Namakkal news, Namakkal news today- நாமக்கல்லில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா இரண்டம் நாள் நிகழ்ச்சியில் இலக்கியப் பேச்சாளர் சுகிசிவம் கலந்துகொண்டு பேசினார்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 2-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இப்புத்தக திருவிழாவில் 80-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள், 16 பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், அரசு துறைகளின் பணி விளக்க அரங்குகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வருகிற பிப். 2ம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெறுகிறது.

புத்தகத்திருவிழா 2ம் நாள் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், நன்செய் இடையாறு தமிழன் கலைக் குழுவின் கால் கோல் ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், இலக்கிய பேச்சாளர் சுகிசிவம் கலந்துகொண்டு புத்தகம் என்ன செய்யும் என்ற தலைப்பில் பேசினார். எருமப்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வ செந்தில்குமார் சிந்திக்கப் பழகு என்ற தலைப்பில் பேசினார்.

நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், திருச்செங்கோடு ஆர்டிஓ சுகந்தி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மல்லிகா, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News